அகநானூறு - 160. நெய்தல்
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ? நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம். அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக் குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி, நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த |
5 |
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க் கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல வாவு உடைமையின் வள்பின் காட்டி, |
10 |
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல், பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப, இர வந்தன்றால் திண் தேர்; கரவாது |
15 |
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் அரவச் சீறூர் காண, பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே. |
தோழி வரைவு மலிந்து சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 160. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, வந்தன்றால், எட்டுத்தொகை, சங்க