அகநானூறு - 27. பாலை
"கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார், நாம் அழ, நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார், செல்ப" என்ப' என்போய்! நல்ல |
5 |
மடவைமன்ற நீயே; வடவயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை, மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் |
10 |
தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் தௌ நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப் பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட, வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் |
15 |
குருதியொடு துயல்வந்தன்ன நின் அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே? |
செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. - மதுரைக்கணக்காயனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 27. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க