அகநானூறு - 193. பாலை
கான் உயர் மருங்கில் கவலை அல்லது, வானம் வேண்டா வில் ஏர் உழவர் பெரு நாள் வேட்டம், கிளை எழ வாய்த்த, பொரு களத்து ஒழிந்த குருதிச் செவ் வாய், பொறித்த போலும் வால் நிற எருத்தின், |
5 |
அணிந்த போலும் செஞ் செவி, எருவை; குறும் பொறை எழுந்த நெடுந் தாள் யாஅத்து அருங் கவட்டு உயர்சினைப் பிள்ளை ஊட்ட, விரைந்து வாய் வழுக்கிய கொழுங் கண் ஊன் தடி கொல் பசி முது நரி வல்சி ஆகும் |
10 |
சுரன் நமக்கு எளியமன்னே; நல் மனைப் பல் மாண் தங்கிய சாயல், இன் மொழி, முருந்து ஏர் முறுவல், இளையோள் பெருந் தோள் இன் துயில் கைவிடுகலனே. |
பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது. - மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 193. பாலை, இலக்கியங்கள், அகநானூறு, பாலை, போலும், வாய், சங்க, எட்டுத்தொகை