அகநானூறு - 110. நெய்தல்
அன்னை அறியினும் அறிக; அலர்வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க; பிறிது ஒன்று இன்மை அறியக் கூறி, கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி, கடுஞ் சூள் தருகுவன், நினக்கே; கானல் |
5 |
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும், சிற்றில் இழைத்தும், சிறு சோறு குவைஇயும், வருந்திய வருத்தம் தீர, யாம் சிறிது இருந்தனமாக, எய்த வந்து, 'தட மென் பணைத் தோள் மட நல்லீரே! |
10 |
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்; மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக் கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?' என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு, இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி, |
15 |
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென. 'நெடுங் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ?' எனக் காலின் சிதையா, நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் |
20 |
என்னே குறித்த நோக்கமொடு, 'நன்னுதால்! ஒழிகோ யான்?' என அழிதகக் கூறி, யான் 'பெயர்க' என்ன, நோக்கி, தான் தன் நெடுந் தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் என்றும் என் மகட்கே. |
25 |
தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - போந்தைப் பசலையார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 110. நெய்தல் , இலக்கியங்கள், அகநானூறு, நெய்தல், நோக்கி, யான், கூறி, மென், எட்டுத்தொகை, சங்க