நல்வழி - அவ்வையார் நூல்கள்
தண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால் கண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை கற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி. |
16 |
உலகில் பல அற்புதங்கள். வியப்பு. தண்ணீரின் இருப்பும் சுவையும் நிலத்தில் நலத்தன்மையால் அமைகிறது. கொடைக்குணம் படைத்தோரைத் தக்கோர் என்கிறோம். கண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கருணை காட்டுவதால் வெளிப்படுகிறது. பெண்ணுக்கு நீர்மை என்னும் நன்னெறி கற்பு அழியாமல் இருக்கும் அவளது ஆற்றலால் அமைகிறது. வையத்துக்குப் பாதுகாப்பு கடல். இவை எல்லாமே அற்புதம்.
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்?-வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும் பானை பொங்குமோ மேல்! |
17 |
செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம் வையத்து அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று வெறும்பானை பொங்குமோ மேல் வெறும் பானை பொங்குமோ? (உலையில் அரிசி போட்டு அடுப்பு எரித்தால்தானே சோறு பொங்கும்.) அதுபோல, முன்பு கொடுத்து வைத்திருந்தால்தானே இன்று செல்வம் நமக்குத் திரும்ப வந்து சேறும். பாவம் செய்துவிட்டு, முயன்று ஈட்டியும் பணம் சேரவில்லையே என்று தெய்வத்தை நொந்துகொள்வதால் என்ன பயன்.
பெற்றார் பிறந்தார் பெரு நாட்டார் பேருலகில் உற்றார் உகந்தார் என வேண்டார்-மற்றோர் இரணங் கொடுத்தால் இடுவர்; இடாரே சரணம் கொடுத்தாலும் தாம். |
18 |
தாய்தந்தையர், உடன்பிறந்தவர், உறவினர்கள், வேண்டியவர் என்று யாராய் இருந்தாலும், இந்தப் பெருலகில் பெருமை மிக்க நாட்டில் வாழ்பவர் ஆயினும், நச்சரித்து வற்புறுத்தினால்தான் கொடுப்பார்கள். வணங்குக் கேட்டால் தரமாட்டார்கள். இரணம் – ரணம் = காயம், உதைத்தால் கிடைக்கும். கெஞ்சினால் கிடைக்காது. கொடை வன்முறையால் பெறலாம் என்பது ஒரு கோட்பாடு.
சேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம் பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே நாம். |
19 |
பாழாப் போன உடம்பைப் பாதுகாப்பதற்காக, வயிற்றுப்பசிக் கொடுமைக்கு நாள்தோறும் ஒரு படி அரிசி வேண்டும். அதற்காக யார்யாருக்கோ கும்பிடு போடுகிறோம். யார்யாரிடமோ சென்று கெஞ்சிப் பிச்சை வாங்குகிறோம். கடல் கடந்து சென்று பாவனைத் தொழில் புரிகிறோம். யார்யாரையோ பாராட்டுகிறோம். பாட்டுப் பாடுகிறோம். – அந்தோ! எல்லாமே வயிற்றுப் பிழைப்புக்காக. சேவித்தல் = வணங்குதல், பாவித்தல் = நடித்தல், போவித்தல் = போற்றல், நாழி = படி (கொள்ளல்-அளவை).
அம்மி துணையாக ஆறு இழிந்தவாறு ஒக்கும் கொம்மை முலை பகர்வார் கொண்டாட்டம்-இம்மை மறுமைக்கும் நன்று அன்று மாநிதியம் போக்கி வறுமைக்கு வித்தாய் விடும். |
20 |
அம்மி துணையாக ஆறு இழிந்த ஆறு ஒக்கும் கொம்மைமுலை பகர்வார்க் கொண்டாட்டம் இம்மை மறுமைக்கும் நன்று அன்று. மா நிதியம் போக்கி வெறுமைக்கு வித்தாய் விடும். (ஓடத்தில் ஏறி ஆற்றைக் கடக்க வேண்டும்) அதை விடுத்து, கல்லில் செய்த அம்மிமீது ஏறி ஆற்றைக் கடப்பது போல, முலையை ஏலம் போட்டு விற்கும் பெண்களைக் கொண்டாடித் துய்க்கும் இன்பம் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுபிறவி வாழ்க்கைக்கும் நன்மை பயக்காது. வைத்திருக்கும் பெருஞ் செல்வத்தை அழித்துவிடும். அது ஒரு விதை. கையில் காசில்லாதவனாக்கும் விதை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்வழி - அவ்வையார் நூல்கள், நூல்கள், அன்று, சென்று, நல்வழி, என்ன, பாவம், தெய்வத்தை, இன்று, அவ்வையார், நீர்மை, பொங்குமோ, கடல், வேண்டும், அம்மி, அரிசி, போட்டு, துணையாக, நாழி, கொண்டாட்டம், ஆற்றைக், விடும், வாழ்க்கைக்கும், விதை, | , வித்தாய், போக்கி, மேல், இம்மை, மறுமைக்கும், நன்று, ஒக்கும், இடார்க்கு, நன்னெறி, எல்லாமே, செய், என்னும், அமைகிறது, இலக்கியங்கள், தக்கோர், கற்பு, தீவினை, இருக்கத், அறும், அறிந்து, வெறும், வையத்து, நிதியம், நொந்தக்கால், எய்த, வருமோ, பானை