6. அங்கிதாரணை - ஞானக் குறள்
அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கிற் பந்தப் பிறப் பறுக்கலாம். |
51 |
உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூரிற் கள்ள மல மறுக்கலாம். |
52 |
எரியுங் கழல்போல வுள்ளுற நோக்கிற் கரியுங்கன லுருவ மாம். |
53 |
உள்ளங்கி தன்னை ஒருங்கக் கொழுவூறில் வெள்ளங்கி தானாம் விரைந்து. |
54 |
உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சி லந்தி யழலுருவ மாம். |
55 |
ஐயைந்து மாய வகத்துளெரி நோக்கிற் பொய்யைந்தும் போகும் புறம். |
56 |
ஐம்பது மொன்றுமழல் போலத்தா னோக்கி லும்ப ரொளியாய் விடும். |
57 |
தூண்டும் சுடரைத் துளங்காமற் றானோக்கில் வேண்டுங் குறை முடிக்கலாம். |
58 |
உள்ளத்தாலங்கி யொருங்கக் கொழுவூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து. |
59 |
ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு. |
60 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
6. அங்கிதாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - விரைந்து, கொழுவூறில், மாம், நோக்கிற்