பாடல் 66 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பரமகுரு சனியும் பாம்பும் |
போகமா முனிவரருள் பெற்ற புலிப்பாணி கூறும் இக்கருத்தையும் நன்கு ஓர்ந்து கவனிப்பாயாக! பிரசித்தமான பரம சுகமளிக்கும் குருபகவானும் சனியும் பாம்பும் பலமுள்ளவராக சரம், உபயம் அமர்ந்து நிற்க அச்சென்மன் சிவ பரம்பொருளின் பேரருளால் தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரம் செல்வான். நீ மிகவும் ஆராந்து கூறுவாயாக. இலக்னாதிபதி வலுத்திருந்தால் முருகப்பெருமானின் அருளால் அவன் அவனது குடியில் வந்து வெகுகாலம் வாசம் செய்வான் என்றும் உணர்த்துவாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 66 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், வெகுகாலம், astrology, சனியும்