பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா அசுரகுரு கேந்திரகோணம் |
புலிப்பாணி கூறுவதைச் சற்றே கேட்பாயாக! அசுரர்களின் குரு எனப் போற்றி செய்யப்பெறும் சுக்ராச்சாரி சாதகனின் கேந்திர கோணத்தில் நிற்க அவரைத் தீய கோள்கள் பார்ப்பினும் அவர் நற்பலன்களையே தருவார். அச்சாதகனுக்கு உப்பரிகை மேடையும், கனவயிரமும் முத்துமாலை போன்ற அணிமணிகளும் அவன் மனையில் பொருந்தி இன்பம் தருவதாகும். இதனை இலக்கின, இராசி அதிபர்களின் பலமுணர்ந்து ஆய்ந்து கூறுக.
இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சுக்கிரன், யோகம், தரும், பாடல், பொருந்தி, astrology, அசுரகுரு