பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி - புலிப்பாணி ஜோதிடம் 300
மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில் |
இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.
இப்பாடலில் ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், ஒன்பதாம், மாந்தி, புலிப்பாணி, இடத்தில், பாடல், குளிகன், பிறந்த, நிற்கப், கிரக, கூறுக, பிதுர், astrology, இடமான, ஸ்தானத்தில்