பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாடினேன் இன்னமொரு புதுமைகேளு |
நான் என்கவியில் பாடுகின்ற இன்னொரு புதுமையையும் மனங்கொண்டு கேட்பாயாக! மிக அழகிய கும்ப லக்கினத்தில் உதித்த மகனுக்கு அசுரர் தம் குருவான சுக்கிராச்சாரியார் திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால் உப்பரிகையும் சிறந்த மேடையும், இணையற்ற திரவியமும் செந்நெல் விளையும் நறுவிய பூமியமைதலும் நிச்சியமாக நேரும். மிகு தனவானாக சிறந்து வாழ்வான். ஆயினும் கேந்திர [1,4,7,10] நட்பு ஸ்தானங்களில் சுக்கிரபகவான் இருந்தால் மேற்குறித்த பலனுக்கு நேர்மாறான பலன்களைக் குறித்து கிரக நிலவரம் அறிந்து கூறுவாயாக! [எ-று]
இப்பாடலில் கும்ப இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், கும்ப, புலிப்பாணி, ஜாதகர், இலக்கின, பாடல், ஸ்தானங்களில், astrology, திரவியமும்