பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா வில்லதனில் உதித்தபேர்க்கு |
இராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்படும் புதபகவான் பகையானவர். அவரால்,
செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன். [எ-று]
இப்பாடலில் தனுசு இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, தனுசு, ஜாதகர், இலக்கின, பாடல், என்றும், astrology, கொண்டு