பாடல் 297 - புலிப்பாணி ஜோதிடம் 300
இலக்கினத்திற்கு உரிய அட்டமாதிபன் 7,1,5,9,1,4,10, ஆகிய இடங்களில் அமர அவன் செய்யும் கொடுமைகளை நான் மிக அழகாகக் கூறுகிறேன். அதையும் நீ நன்குணர்ந்து கேட்பாயாக. விளைச்சல் மிக்கவயலில் தீப்பாயும். வெகு சேதம் விளையும். அரச கோபம் உண்டாகும். அநியாய தண்டங்கள் ஏற்படும். சிறையுண்டு இச்சாதகனுக்கு, ஆயினும் மீண்டும் வந்து மாடு, மனை, மக்களுடன் வெகுதனவானாய் வாழ்ந்து மேலும் மேலும் பல அரசர்களின் பொக்கிஷங்களை எல்லாம் கொள்ளை இடுவான். விளக்கு மாற்றால் அடிபடுபவனும் இவனே. நல்ல மனைவியை வெறுத்துப் புறம் போவான்; அம்மனையாளை ஒரு மூலையில் உறங்க வைப்பான்; பட்டினிபோடுவான். முழுவதும் பட்டினி போட்டு வருத்துவதுடன், பிறர் ஏசிடவும் வைப்பான். புறங்கடையில் கையெந்திப் பிச்சையும் ஏற்றிடச்செய்வான்; இன ஜனபந்துக்களால், இவனுக்கு வெட்டு, குத்து ஆகியவை ஏற்படும்., இவன் நகரமக்களால் தெருவில் கொல்லப்படுவான். இவர்களிலும் உன்னதன் ஒருவன் உத்தமக் களத்திரம் பெற்றோன் என்றால், இவனே உன்னத போகங்களை அனுபவிப்பவன். நல்ல சித்திரம் போலும் பதுமை போலும் நல்ல சீமாட்டி வாயிலும் இவனுக்காகக் காத்திருக்கும்: இந்திர லீலை சுந்தர வைபோகம் ஆகியவை ஒரு க்ஷணத்தில் துன்பம் காட்டி பின் இன்பம் செய்வான் என்று எனது குருநாதரான போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 297 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், நல்ல, புலிப்பாணி, பாடல், அவன், விட்டேன், சுந்தர, க்ஷணத்தில், ஏற்படும், வைபோகம், இவனே, போலும், ஆகியவை, வைப்பான், சீமாட்டி, மேலும், காத்திருப்பன், நானும், கொடுமைகளை, செய்யும், astrology, மூலையில், உறங்க, ஒருவன், போட்டு, முழுவதும், உன்னத