பாடல் 277 - சுக்கிர மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆளலாம் சுக்கிரனில் கேதுபுத்தி |
சுக்கிர மகாதிசையில் கேது பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 2 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன: வளருகின்ற கொடிபோலும் இடையுடைய மனையாள் மரணம் நேரும். மிகுதியான திரவிய நாசம் ஏற்படும். ஒப்பாகும் மிக்காரும் இல்லாது தனித்தரசாண்டிருந்த நிலைமை மாறும். நாடு நகரங்கள் இழப்பாகும், சம்பத்து குறையும். தாய் தந்தை மரணமடைவர். கோள் வைக்கக் கூடிய சத்துருக்களால் குடிக்குக் கேடு விளையும். மனைவி மனம் வெறுத்து வீட்டைவிட்டுப் போவாள். குடும்பமானது சிதையும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 277 - சுக்கிர மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், கேது, சுக்கிர, புலிப்பாணி, பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, மகாதிசையில், astrology