பாடல் 271 - சுக்கிர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆவானே சுக்கிரதிசை சந்திர புத்தி |
சுக்கிர மகாதிசையில் சந்திர பகவானின் ஆதிக்க காலம் 1 வருடம் 8 மாதங்களாகும். இக்கால கட்டத்தில் நிகழும் பலன்களாவன: திருமகளைப் போல் திகழ்ந்த அன்னை மரணமடைவாள். அவளது சாவுக்குப்பின் தேடி வைத்திருந்த திரவியங்கள் நாசமாகிப் போகும்; பதர் போன்ற மனைவியை விரும்பாது அவளிடமிருந்து விலகி இச்சாதகன் ஓடிப் போதலும் நேரும். வியாதி தொடர்ந்து காண்பதால் வெகு வருத்தையும் அடைவான். சமயம் பார்த்து பழவினையானது தனது பணியைச் செய்வது எத்தனை அதிசயமானது எனப் போகர் கருணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சுக்கிர மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 271 - சுக்கிர மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சந்திர, சுக்கிர, புலிப்பாணி, பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, மகாதிசையில், astrology