பாடல் 264 - கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
தானென்ற கேதுதிசை செவ்வாய்புத்தி |
இனி இக்கேது பகவானின் திசையில் செவ்வாயின் ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவரால் நிகழ்த்தப் பெறும் பலன்களைக் கூறுவோம். கவனமாகக் கேட்பாயாக! வலிமையுள்ள இனஜன பந்துக்களும் தாமறியாதவாறே சத்துருக்களாக மாறிப் போவர். மனையில் சிலர் கோள் சொல்லுதலால் குடும்பம் பாழாகும். பெண்களால் குல நாசம் ஏற்படும். நிதானித்துத் திரட்டிய வெகுதனமும் விரயமாகிப்போகும். சகோதர விரோதம் உண்டாகி அதனால் தீமை மிக்க பலனே நேரும் எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் கேது மகாதிசையில் செவ்வாய் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 264 - கேது மகாதிசை, செவ்வாய் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, செவ்வாய், கேது, பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, திரவியமும், astrology