பாடல் 260 - கேது மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆமென்ற கேதுதிசை வருஷம்யேழுஅதனுடைய புத்திநாள் நூத்திநாற்பத்தியேழுபோமென்ற அதன் பலனைப் புகலக்கேளுபுகழான அரசர்படை ஆயுதத்தால் பீடைதாமென்ற சத்துருவால் வியாதிகாணும்தனச்சேதம் உடல் சேதம் தானே உண்டாம்நாமென்ற நகரத்தில் சூனியங்களுண்டாகும்நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப்பகையே |
கேது பகவானின் திசை வருடம் 7 ஆகும். இதில் இவரது சுய புத்தியான ஆதிக்க காலம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் இவர் நிகழ்த்தும் பலன்களாவன இவை தான் என்று சொல்வோம். நன்கு கவனித்து கேட்பாயாக! புகழ் மிக்க அரசரது படையாலும் ஆயுதங்களாலும் பீடைகள் ஏற்படும். வலிய பகைவரால் பலவகைத் தொந்தரவுகளும் அதனால் வியாதியும் நேரும். பெரும் பொருட்சேதமும் அங்கத்தில் குறையுண்டாதலும் தானாகவே வந்துசேரும். தான்வசிக்கும் நகரத்தில் பலவகைச் சூனியங்களும் உருவாகும், நாட்டுமக்கள் எல்லாரும் பகையாகித் துன்பம் தருவதால் நன்மை நேராது என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் கேது மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 260 - கேது மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, கேது, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, நகரத்தில், astrology