பாடல் 258 - புதன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
போமென்ற புதன் திசையில் வியாழபுத்தி |
புதமா திசையில் வியாழ பகவான் புத்திக் காலம் பெரும் புகழ் தருவதான 2 வருடம் 3 மாதம் 6 நாள்களாகும். இவர் தன் ஆதிக்க காலத்தில் அளிக்கும் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! சத்துரு உபாதையும், நோயும், மனபயமும் நீங்கி சகலவிதமான செல்வ நலங்களும் பெருகி இப்பூமியில் பெரும் புகழுடன் வாழ்வான். சகலவிதமான யோகங்களும் சித்திக்கும். அனேக புத்திரர்களும் இச்சாதகனுக்கு உண்டாம் என்று போகர் பேரருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் புதன் மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 258 - புதன் மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, புதன், வியாழன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, சகலவிதமான, பெரும், astrology, திசையில்