பாடல் 250 - சனி மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
சாவில்லாக் காரிதிசை வியாழபுத்தி |
இனி இச்சனிபகவானின் திசையில் வியாழ பகவானின் பொசிப்புக் காலம் 2 வருடம் 6 மாதம் 12 நாள்களாகும். நன்மை தரத்தக்க இக்கால கட்டத்தில் விளையும் பலன்களாவன: திருமணம் நடந்தேறும். மனத்திற்கேற்ப மனைவி அமைவாள். முதாதையர் பெரும் தனம் வகையாக வந்து சேரும். வாகனயோகம் அமையும். புதையல் தனம் கிடைக்கும், ஈனகுணம் மிக்க சத்துருக்களும் இச்சாதகனின் காலடியில் வீழ்ந்து அடிமைப் படுவர் எனப் போகர் அருளால் புலிப்பாணி புகன்றேன்.
இப்பாடலில் சனி மகாதிசையில் வியாழன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 250 - சனி மகாதிசை, வியாழன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, வியாழன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, தனம், astrology, காலடியில்