பாடல் 236 - வியாழன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா வியாழதிசை கேது புத்தி |
வியாழ மகாதிசையில் கேது பகவானின் பொசிப்புக் காலம் தீது 11 மாதம் 6 நாள்களாகும். இன்பம் நல்காத அக்கால கட்டத்தில் நிகழும் பலன்களைக் கேட்பாயாக! கொடிய வியாதியினால் மரணமடைதலும், இதமாக நடந்து கொள்ளத் தெரியாத மனைவியினால் மனமுறிந்து பிரிந்து செல்வதும் நேரிடும். பகைவர்களும் பலவிதத்தில் சேதம் விளைவிக்க வந்து சேர்வார்கள், சகல ஜனங்களால் கிடைத்த அனைத்து பாக்கியமும் ஒரு கணத்தில் மறைந்து போம் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் வியாழன் மகாதிசையில் கேது புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 236 - வியாழன் மகாதிசை, கேது புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், கேது, புலிப்பாணி, வியாழன், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, மகாதிசையில், astrology, பாக்கியமும்