பாடல் 223 - செவ்வாய் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பூணுவான் செவ்வாயில் சந்திரபுத்தி |
இனி, இச்செவ்வாய் மகாதிசையில் இறுதி புத்தியான சந்திரனின் பொசிப்புக் காலம் ஏழு மாதங்களேயாகும். இவ்வேழு மாதங்களும் நற்பலன்களும் விளையும். மனைவி இணக்கமாக இருந்து வெகு செல்வம் நல்கி விளங்கி வாழ்வாள்; தீயவர்களும் தங்கள் தவற்றினையுணர்ந்து வணங்கி வழிபடுவர். இந்நிலவுலகில் வெகுவான பேர் விளங்கும். நல்ல மனைவியரும் புத்திரரும் வாய்ப்பர். இவையெல்லாம் குலதெய்வத்தின் பேரருளால் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 223 - செவ்வாய் மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சந்திர, செவ்வாய், பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, மகாதிசையில், astrology, பேர்