பாடல் 218 - செவ்வாய் மகாதிசை, சனி புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
வெற்றியில்லா சேய்திசை சனியன்புத்தி |
வெற்றியே அளிக்கவல்ல செவ்வாய் திசையில் அச்செவ்வாயின் பகைவன் எனச் சொல்லத்தகும் சனிபகவானின் பொசிப்புக் காலம் 1வருடம் 1 மாதம் 9 நாள்களாகும். இவை சுகமில்லா நாள்களே. இக்கால கட்டத்தில் பலன்களைக் கூறுகிறேன். கேட்பாயாக! அறிவற்ற பேதைகளான சத்துருக்களினால் பயம் ஏற்படும். நோயின் பயம் உண்டாகும். பெண்டிரும், புத்திரர்களும் மரணமடைய நேரிடும்; ஆதாரமற்ற தர்க்கங்கள் உண்டாகும்; அவையும் வெகுவானதாக இருக்கும். சூனியங்களால் தொல்லையும் கனாக்களினால் பயமும் ஏற்படும் என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் செவ்வாய் மகாதிசையில் சனி புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 218 - செவ்வாய் மகாதிசை, சனி புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, செவ்வாய், பலன்கள், பாடல், புத்திப், மகாதிசை, ஏற்படும், உண்டாகும், பயம், நாளதுவும், astrology, தர்க்கங்கள்