பாடல் 211 - சந்திர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாளில்லா சந்திரன் திசை புதனின் புத்தி |
மேலும் வேறுபாடில்லாத சந்திர திசையில் புதனின் பொசிப்புக்காலம் 17 மாதங்களேயாகும். அந்தக் கிரகத்தின் பலன்களை நன்கு அறிந்து கூறுவாயாக! ஏனெனில் குணமுள்ள மாதர்களால் அச்சாதகனுக்கு மனமகிழ்ச்சியுண்டாகும். திடுமென்று திருமணம் நிகழ்தலும் உண்டு. நிறைந்த பாக்கியங்களும் நிகழும். நவதானிய வகைகள் சேரும். தேனிலுள்ள வாசத்தைக் கலக்கும் வண்டென இச்சாதனைகளைத் தெரிவையர்கள் என்ற வயதான மங்கையர்கள் தெளிந்து நிற்பார்கள் என்று போகரது கருணையால் புலிப்பாணி பாடினேன்.
இப்பாடலில் சந்திர மகாதிசையில் புதன் புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 211 - சந்திர மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சந்திர, புதன், பலன்கள், புத்திப், பாடல், மகாதிசை, புதனின், astrology