பாடல் 198 - சூரிய மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300
கூறினோம் விதிசையில் சந்திரபுத்தி |
இச்சூரிய மகாதிசையில் சந்திரனின் பொசிப்புக்காலம் 6 மாத காலங்களாகும். இக்காலகட்டத்தில் ஏற்படக்கூடிய பலனைச் சொல்கிறேன். கேட்பாயாக! கெடுதலே இல்லாத தனலாபம் வாய்ந்து சொத்து சேர்க்கை மிகும். நோயுபாதை இருப்புன் அவை நீங்கித் தேகமானது நலம்பெறும். அரசர்களால் பெருமையும் பாராட்டும் பரிசும் வந்தடைவதால் வெகுவான மகிழ்ச்சியுண்டாம். எனவெ இரவி திசையில் சந்திர புத்தி சிறப்பான நாள்களே என்று போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
இப்பாடலில் சூரிய மகாதிசையில் சந்திர புத்தியின் பலன்களைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 198 - சூரிய மகாதிசை, சந்திர புத்திப் பலன்கள் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, சந்திர, சூரிய, பாடல், பலன்கள், புத்திப், மகாதிசை, மகாதிசையில், astrology, தனலாபம்