பாடல் 177 - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா பண்டிதனே குறிப்புசொல்வேன் |
பண்டிதன் என்று உலகறியக் கூறிக் கொள்ளும் ஜோதிடனே! என்னுடைய குறிப்பையும் நீ நன்குணர்ந்துகேட்பாயாக! மிகவும் கவனமுள்ள பதினெண் சித்தர்களும் இதனை நன்கு பிரித்துப் பலன் கூறும் பண்பு வாய்ந்தவர்கல். எனினும் அவர்கள் இத்னை வெளிப்படையாகச் சொல்லார். ஆனால் இந்நிலவுலகில் அவதரித்தவர்களுக்கெல்லாம் அவரவர் ஜெனித்த ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்கு நடக்கும் திசா புத்திகளையும் நன்கு ஆராய்ந்து அக்கிரகங்களின் பொசிப்பினையும் உனர்ந்து அன்று நடக்கும் சித்திரமும் கண்டு அவ்வக்கிரகத்தின் நாடிக்கேற்ற பிணிக்குரிய மருந்தினையும் நீ கொடுத்திடல் வேண்டும் என்று போகரது கருணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 177 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நன்கு, நடக்கும், ஜாதகத்தைப், சித்தர்களும், astrology, ஜெனித்த