பாடல் 175 - புலிப்பாணி ஜோதிடம் 300
நடித்திட்டேனின்னமொன்று நாட்டக்கேளுநரக்குருவும் அசுரகுரு அனலன்பின்னால்படித்திட்டேன் பலகவியும் நூல்கள் கற்போன்பலமான வித்தையென்று புவியில் வாழ்வான்இடித்திட்டேன்யெட்டுபத்து யெட்டு ஆண்டில்ஈசன் லபி முடியுமடா சிசுவுக்கேதான்குடித்திட்டேன் குழவிக்கு பாலையோகம்குணமாக புலிப்பாணி அறைந்திட்டேனே. |
நான் இன்னொரு கருத்தையும் உனக்கு நாட்டமொடு கூறுகிறேன் கேட்பாயாக! தேவகுருவும், அசுரகுருவும் சூரியனுக்குப் பின்னே நிற்க. அச்சாதகன் வெகுவான கவிகளையும் படிக்கவல்லவன். மேலும் பன்னூல் பயிற்சியுள்ளவன்; வித்தையில் மிகவும் விற்பன்னன். பூமியில் நீண்ட நாள் வாழ்வான். 88 ஆண்டுகளில் சிவபதம் அடைவது எம்பெருமானான ஈசன் செயல் என்றும் இது பாலை யோகம் எனப் பகரப்படும் என்றும் போகமா முனிவர் பேரருளால் புலிப்பாணி பகர்ந்தேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 175 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், என்றும், astrology