பாடல் 165 - புலிப்பாணி ஜோதிடம் 300
சொல்லுகிறேன் அஞ்சுக்கு கிலேசனாவன்சுயதேச பரதேச வாசம் சென்மன்வில்லுகிறேன் விதிகுறைவு மெலிந்ததேகன்விளங்குகின்ற புத்திரரும் பரந்து போகும்புல்லுகின்றேன் பெரியோர்கள் கண்ணுற்றாலும்பூதலத்தி லதிகாரி பெரியோர்நேசன்நல்லதொரு திசைபுத்தி பொருளுஞ்சேரும்நலமறிந்து செப்புவாய் சனிக்குதானே. |
இன்னொரு கருத்தினையும் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஐந்தில் சனி நிற்பின் அவன் கிலேச முடையவனாவான். சொந்த ஊரிலும் பிற தேசங்களிலும் சென்று வாழும் ஜென்மமுடையவன். மேலும் விதி குறைந்தவன்; மெலிந்த தேகன். புத்திர நாசம் உடையவன். ஆனால் சுபர் பார்ப்பின் இந்நிலவுலகில் ஆட்சி செய்யும் அதிகாரியாக, பெரியோர்களால் விரும்பப்படுபவனாக வாழக்கூடியவனே. இதற்கு திசாபுத்தி வலுவறிந்து பலனை நிகழ்த்துக என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 165 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், astrology