பாடல் 153 - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா யின்னமொரு புதுமைகேளுபாம்புடனே மூன்றோனும் தீயனாகில்கூறப்பா யெத்திடத்தில் கூடிட்டாலும்குமரி கள்ளப் புருஷனையும் கூடுவாளாம்ஆரப்பா அகந்தனிலே யிவள்தான்மூப்பிஆளனுமே இவள்சொல்லை மீறுவதில்லை.ஊரப்பா வூரருகில் கடலுமுண்டுஉத்தமனே யிருக்குமடா ஆறுமாரே. |
இன்னுமொரு புதுமையான கருத்தினையும் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக! இலக்கினத்திற்கு மூன்றுக்குடையவன் தீயனாகி அவன் பாம்புடனே கூடி எவ்விடத்தில் இருப்பினும் அவன் மனைவி சோர புருஷனைக் கூடுவாள். வீட்டினில் இவளோ வயது முதிர்ந்தவள். இவளது கணவன் இவள் சொல்லைத் தட்டமாட்டான். இவள் ஊருக்கு அருகே கடலுண்டு என்பதையும் வழியறிந்து வகைதொகையாகக் கூறுக என்று போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 153 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், இவள், astrology, அவன்