பாடல் 138 - புலிப்பாணி ஜோதிடம் 300
தானப்பா யின்னமொரு புதுமைகேளு |
மேலும் ஒரு புதுமையினைக் கூறுகிறேன். இதனையும் நீ நன்கு உணர்ந்து கேட்பாயாக! தனஸ்தானம் என்னும் இரண்டாம் இடத்தில் விரயாதிபதியானவன் நிற்பின், அச்சாதகன் உப்பரிகையுடன் கூடிய மாட கூடம் அமைத்துக் கட்டுவன், அவன் உத்தமனே அவனது இலக்கினபலத்தையும் அறிந்து கூறுக. அவ்விலக்கினாதிபதி குருவோ, சந்திரனோ, புதனோ, சுக்கிரனோ அவர்தம் இல்லுக்கு ஏற்ற வகையில் செம்பொன் சேரும் என்று திசாபுத்தி அறிந்து சிவபரம் பொருளின் கருணையிது வென்று கூறுக என்று போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 138 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கூறுக, அறிந்து, astrology, கட்டுவன்