பாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300
ஆரப்பா நாலஞ்சு பேர்கள்கூடஅப்பனே ரெண்டொருவர் முன்பின் நிற்கபாரப்பா பண்டுபொருள் பதியும் தீதிபதிகடந்து அலைவனடா பொருளுங்கொஞ்சம்கூறப்பா குடிநாதன் சேர்ந்திருக்ககொற்றவனே குழவிக்கு நிதியும்மெத்தசீரப்பா போகருட கடாட்சத்தலேசெப்பினேன் புலிப்பாணி திறமாய்த்தானே |
மற்றொரு கருத்தையும் நீ மனங்கொண்டு கேட்பாயாக! நான்கு அல்லது ஐந்து பேர் ஒரு மனையில் கூட, மற்றும் இரண்டொருவர் முன்பின்னாக நிற்க, பூர்வீக சொத்துக்கும், மனைக்கும் தீமையுண்டாம். அவன் பிறந்த ஊரைவிட்டு வேறிடம் சென்று அலைவன். அவனுக்கு வாய்க்கும் பொருளும் அற்பமே ஆயினும் இலக்கினாதிபதி அவர்களுடன் கூடினால் அச்சென்மனுக்கு மிகச்சீரே கூடினால் விளையும் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 130 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், கூடினால், astrology