பாடல் 124 - புலிப்பாணி ஜோதிடம் 300
போச்சப்பா யின்னமொரு பேச்சுகேளுபொன்னுவெள்ளி சனி செவ்வாய் புந்தி ஐவர்யேச்சப்பா யெத்தலத்தில் கூடிட்டாலும்என்மகனேயென்ன சொல்வேன் இராஜகள்ளன்ஆச்சப்பா அரண்மனைக்குள் புகுந்தானானால்அங்கிருக்குந் தலையாரி உறங்கிப் போவான்வீச்சப்பா போகருட கடாட்சத்தாலேவிதமான புலிப்பாணி விளம்பினேனே |
இன்னொரு கருத்தையும் நான் கூறுகிறேன். அதனையும் நீ கேட்பாயாக! வியாழனும், சுக்கிரனும், சனியும், செவ்வாயும், புதனும் ஆகிய இவர்கள் ஐவரும் எந்த இடத்தில் கூடினாலும் அச்சென்மனை நான் என்னவென்று சொல்வேன்? இவனே இராஜகள்ளன். இவன் அரண்மனைக்குத் திருடச் சென்றானேயானால் அங்குள்ள காவலன் உறங்கிப் போவான். இதனையும், போகரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 124 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், நான், உறங்கிப், astrology, சொல்வேன்