பாடல் 11 - முதற் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300
சீர்மலிமுதற்பாகத்தின் பலன் றான்சித்தி தங்கிலேச மெய்சொரூபம்பேர் மலிவயதும் பகர்தனுத்தானம்பெருநிதிகீர்த்தி மூர்த்திகளும்ஏர்மலிசு பந்தோஷநிறமும்மிலக்கணமுபாங்கமே முதலாம்தார்மலிபோகர் தாளிணைவணங்கிச்சாற்றினே புலிப்பாணிதானே |
பெருமைக்குரிய மாலையணிந்த என் குருநாதர் போகமுனிவரின் தாளிணை பணிந்து முதற் பாவகத்தின் மூலம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பற்றிய பெயர்களைக் கூறுவேன் கேட்பீராக, ஒரு ஜாதகனின் வடிவத்தையும் அறிவு நலனையும், வயதையும், தன சம்பந்தமான விஷயங்களையும், கிடைக்கும் பெருநிதியையும். புகழையும்,அடையும் பேறுகளையும், ஏற்படக்கூடிய இன்பங்களையும், நிறத்தையும் குண விசேடங்களையும் நன்கு கூறலாம். [எ-று]
இப்பாடலில் முதற் பாவத்தின் தன்மைகளைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 11 - முதற் பாவம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், முதற், புலிப்பாணி, பாவம், பாடல், astrology