பாடல் 105 - புலிப்பாணி ஜோதிடம் 300
கேளப்பா இன்னமொரு புதுமைகேளு |
அப்பனே இன்னுமொருபுதுமையினையும் கூறுகிறேன். அதனையும் நன்கு உணர்ந்து கேட்பாயாக! தீமையையே செய்யும் செம்பாம்பு எனக் கூறப்படும் கேது பகவான் நான்காம் இடத்தில் நிற்க அந்த சென்மன் உதித்த மனைபாழாகிப் போகும். அவனுக்கு தீக்கோள் தோஷமுண்டு. அவனது விதியையும் கிரகபலம் அறிந்து கூறுக. அவனுடன் மாந்தியும் கூடிநிற்பின் குடியிருக்க வீடோ கன்று காலிகளோ அவனுக்கில்லை. அவனது அன்னைக்கும் தோஷம் உண்டாம் என்று கூறுவதுடன் நாக தோஷப் பரிகாரம் செய்வது சிறப்பாமென்று போகமா முனிவரது பேரருளினால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 105 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அவனது, தோஷம், astrology, செம்பாம்பு