ஆரூடப் பாடல் 63 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௬௩. (63) வந்தால்..
பொல்லலாத சனி ராகு பகையினாலே போகுமொரு காரியங்கள் தடங்கலாகும் நில்லாது பலவிதமாய் அலையச்செய்யும் நிஷ்டூரம் சினேகதிரால் கவலையாகும் நல்லதைச் சொன்னாலம் பொல்லாப்பாகும் நஷ்டமப்பா தொழில் முதறைநான் விந்தையுண்டு சொல்லவே நாற்பத்தி மூன்று நாளில் சுகமுண்டு பருதிகண்ட பனிபோலே. |
ஆரூடத்தில் அறுபத்து மூன்று வந்திருப்பது, சனியும் ராகுவும் பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். எந்த செயலை செய்தாலும் அது தடங்கலாகும். அலைச்சல் அதிகமாகும். நண்பர்களால் கவலையடைய நேரும். நல்லதை சொன்னாலும் அது தீமையாகவே முடியும். தொழிலும் நட்டமடையும். இவை எல்லாம் நாற்பத்தி மூன்று நாளில் சூரியனைக் கண்ட பனிபோல் விலகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 63 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், மூன்று, சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், நாளில், horary, தடங்கலாகும், நாற்பத்தி