ஆரூடப் பாடல் 60 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௬o. (60) வந்தால்..
வருத்தமே யுந்தனுக்கு அதிகமாகும் வையகத்தில் நினைப்பதெல்லாம் அபலமாகும் பொருத்தமுடன் செய்தொழிலில் நஷ்டமாகும் புவிதனிலே மனைவிமக்கள் பகையதாகும் கன்னியால் மனைதனிலே கலகமாகும் கச்சிதமாய் வைத்தபொருள் களவுபோகும் தரித்திரமே மேலோங்கும் சினேகம் நீங்கும் தணியுமப்பா நாளுக்குநாள் தான்பாரே. |
ஆரூடத்தில் அறுபது வந்திருப்பதால், உனக்கு மனக்கவலையே அதிகமாகும். செய்யும் தொழிலில் நட்டமே கிட்டும். மனைவி மக்களும் பகையாவார்கள். ஓரு பெண்ணினால் குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீட்டில் களவு போகும். நல்லவர்கள் நட்பு இல்லாது போகும். இந்த பிரச்சினைகளெல்லாம் படிப்படியாக குறைந்து பின் முற்றாக நீங்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 60 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், போகும், நீங்கும், horary, அதிகமாகும்