ஆரூடப் பாடல் 59 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௫௯.(59) வந்தால்..
அஞ்சாதே கேளமப்பா ஆரூடத்தை அனுதினமும் தோத்தரிப்பாய் நவக்கிரகத்தை சஞ்சலங்கள் விலகுமப்பா தனமேசேரும் தட்டாது உன்வார்த்தை மேன்மையாகும் கொஞ்சநாள் இதுவரையில் கஷ்டப்பட்டாய் கோபத்தால் பலபொருளும் நஷ்டப்பட்டாய் வஞ்சகக் காரர்களால் வருத்தமுற்றாய் வழுத்தினேன் இவ்வாரம் கழியத்தானே. |
ஆரூடத்தில் ஐம்பத்தி ஒன்பது வந்திருப்பதால், கடந்த சில நாட்களாக துன்பப்பட்டாய், நட்டமும் அடைந்தாய். கோபத்தால் பல பொருட்களை இழந்தாய். ஏமாற்றுக் காரர்களால் ஏமாற்றப்பட்டு கவலை அடைந்தாய். இனி பயப்பட தேவையில்லை. தினமும் நவக்கிரகங்களை வணங்கிவர உனக்கு நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். இந்த வாரம் கழிந்த பிறகு உனக்கு நன்மையாக அமையும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 59 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, உண்டாகும், அடைந்தாய், கோபத்தால், horary, காரர்களால்