ஆரூடப் பாடல் 54 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௫௪. (54) வந்தால்..
சந்தேகங் கொள்ளாதே சாற்றுவேன் கேள் சண்முகனின் பாதமலர் சாட்சியாக உந்தனிட எண்ணமெல்லாம் முடியுமப்பா உன்மனையில் வேணபொருள் சேருமப்பா தன்மையுள்ளோர் உனக்குதவி யாவாரப்பா தாட்டிகமாய் வியாபாரம் தழைக்குமப்பா தொந்திரவு துணைநொயும் துலையுமப்பா துதித்திடுவாய் உந்தன்குல தெய்வந்தன்னை. |
ஆரூடத்தில் ஐம்பத்தி நான்கு வந்திருப்பதால். சந்தேகப்படாதே! சண்முகன் சட்சியாக உன் எண்ணங்கள் எல்லாம் இனி நிறைவேறும். உன் வீட்டில் பொருட்கள் சேரும். உயர் பதவியில் இருப்பவர்கள் உனக்கு உதவுவார்கள். வியாபாரம் விருத்தியாகும். அதிக சிரமம் கொடுத்து வந்த நோய் விலகும். அத்துடன் உன் குல தெய்வத்தை வணங்கி வர மேலும் பல நன்மைகளை அடையலாம் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 54 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், வியாபாரம், horary