ஆரூடப் பாடல் 50 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௫o. (50) வந்தால்..
நினைத்து நீ எடுத்ததொழில் பலிக்குமப்பா நிச்சயமாய் புவிதனிலே அடைவாய் லாபம் உனைகெடுக்க வேணபேர் கூடினாலும் உறவற்று அவர்கூட்ட மொழிந்துபோகும் சினந்தவிர்த்து உந்தன்குல தெய்வந்தன்னை சிறப்புடனே பூஜையது செய்வாயானால் கணமுடனே உலகமதில் வாழ்வாயென்று கலக்கமிலா குருமுனியும் உரைத்திட்டாரே. |
ஆரூடத்தில் ஐம்பது வந்திருப்பதுதால், நீ நினைத்து செய்யும் தொழில் யாவும் சிறப்பாக நடைபெற்று அதிக லாபம் கிடைக்கும். உன்னைக் கெடுக்க நினைத்து எத்தனை பேர் கூட்டாக சதி செய்தாலும் அவர்கள் கூட்டமே அழிந்து போகும். நீ அதற்காகக் கோபம் அடையாமல், அதைப் பொருட்படுத்தாமல் குலதெய்வத்தை வணங்கிவர உலகில் சிறப்புடன் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 50 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், நினைத்து, ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், லாபம், horary