ஆரூடப் பாடல் 48 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௪௮. (48) வந்தால்..
உத்தனுடைய எண்ணமெல்லாம் உறுதியாச்சு உடன்பிறந்தோர் பந்துக்களால் உதவியாச்சு சொந்தமான உன் தொழிலில் லாபமாச்சு சுந்தரியால் உன்குடும்பம் செழிக்கலாச்சு மந்தமதியுள்ளோரின் நேசம் போச்சு மகாநோயும் தீர்ந்து மணம் கூடலாச்சு எந்தமுகம் போனாலும் தங்கமுகமாச்சு ஏழைகட்கு தர்மம் செய்வாய் ஈசன் சாட்சி |
ஆரூடத்தில் நாற்பத்தி எட்டு வந்திருப்பதால், உன் எண்ணங்களெல்லாம் சிறப்பாக நிறைவேறும். சகோதரர்களாலும் சொந்தங்களாலும் உதவி கிடைக்கும்.செய்யும் தொழில் விருத்தி அடையும். மனைவியால் உனது குடும்பத்தில் அமைதி கிட்டும். உனைக் கெடுக்க நினனத்த வஞ்சகர்களின் உறவும் விட்டுப் போய்விடும். நோயும் குணமடையும். வீட்டில் திருமணமாகாமல் இருப்போருக்கு திருமண பாக்கியம் கிட்டும். எங்கு சென்றாலும் நல்ல வரவேற்பும் மரியாதைகளும் கிடைக்கும். எழைகளுக்கு தருமம் செய்!, ஈசன் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் நிறைவேற்றி வைப்பார் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 48 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், கிட்டும், கிடைக்கும், horary, ஈசன்