ஆரூடப் பாடல் 43 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௪௩. (43) வந்தால்..
ஒன்பதிலே புதபகவான் உனக்கமர்நத உறுதியினால் நினைத்த எண்ணம் பலிதமாக கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கெண்டம் போச்சு கடன் கொடுத்த பொருள் வரவும் காலமாச்சு மண்மனையும் பொன்பொருளும் சேரலாச்சு மாடாடு கொள்ளவும் பால்பாக்கியமாச்சு துன்மார்க்கர் சகவாசம் வைத்திடாமல் தொல்லுகில் நல்விதமாய் வாழ்ந்திடாயே. |
ஆரூடத்தில் நாற்பத்தி மூன்று வந்திருப்பது, புதன் ஒன்பதாவது விட்டில் அமர்ந்திருப்பதைக் குறிக்கும். கண்ணியமான வாழ்க்கை வாழ்வாய். உனக்கிருந்த கண்டம் போய்விட்டது. கடன்கொடுத்த பொருள் கை வரும் காலம் இது. நிலம் வாங்கவும் மனை வாங்கவும் பொன் பொருள் சேரவும் உகந்த நேரமிது. ஆடு மாடு வாங்கவும் முடியும். ஆனால் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே, அவர்களை விட்டு நிங்கினால் உனக்கு ஒருவித கவலையும் உண்டாகாது என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 43 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஜோதிடம், பொருள், வாங்கவும், ஆரூடங்கள், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், ஆரூடப், horary