ஆரூடப் பாடல் 37 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௩௭. (37) வந்தால்..
மனக்கோட்டை கட்டி நீ மகிழ்ந்திடாதே மலைத்தவுடன் கிரகமெல்லாம் கொடியதாச்சே உனைகெடுக்க வேணபே ருறமேயாவார் உகந்து நீ செய்தொழிலில் நஷ்டங்காண்பாய் வினையமடன் வந்த நோய் வருத்தமாக்கும் வேறிடத்தும் மாற்றி வைக்கும் கவலையாக்கும் மனைவிமக்கள் சுற்றமும் உனைவெறுக்கும் மாதமூன்று போனபின்னே மகிழுவாயே. |
ஆரூடத்தில் முப்பத்தி ஏழு வந்திருப்பது, உனக்கு இப்போது கிரகங்களெல்லாம் நல்ல இடத்தில் இல்லை. மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி அடையாதே. உன்னை வஞ்சிக்கவே எல்லோரும் உன்னிடம் வந்து சேர்வார்கள். நீ செய்யும் தொழில் எல்லாம் நட்டமே ஏற்படும். நோய் வந்து வருத்தம் கொடுக்கும். இடம் மாறி கவலை அடைவாய். உற்றார் உறவினர்கள் உன்னை வெறுப்பார்கள். இந்த நிலை எல்லாம் மூன்று மாதங்களின் பின் நீங்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 37 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், வந்து, எல்லாம், உன்னை, மனக்கோட்டை, horary, கட்டி, நோய்