ஆரூடப் பாடல் 35 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௩௫. (35) வந்தால்..
அம்புவியி லுந்தனிட கிரகமெல்லாம் அனுகூல மாயிருக்க பயமேயில்லை நம்பிய உன் யெண்ணமெலாம் பலிக்குமப்பா நாட்டமிடும் வியாபாரமும் விர்த்தியாகும் கொம்யனையாள் தன்னாலே குடிவிளங்கும் குடும்பமதில் மனஸ்தாபம் விலகிப்போகும் ஒன்பதுநாள் நவக்கிரக பூஜைசெய்ய ஒழியும்மப்பா உனைபிடித்த பீடைதானே. |
ஆரூடத்தில் முப்பத்தி ஐந்து வந்திருப்பதால், கிரகங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றது. இனி பயமில்லை. உன் எண்ணம் எல்லாம் கைகூடும். நட்டத்தில் இருக்கும் வியாபாரம் விருத்தியடைந்து லாபம் கிட்டும். உன் மனைவியின் மகத்துவத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தாருடன் இருக்கும் மனக்கசப்பு நீங்கும் என்று சொல்லும் அகத்தியர் ஒன்பது நாட்கள் தொடர்ந்து நவக்கிரகங்களை வழிபட்டு வந்தால் உனக்கிருக்கும் துன்பம் எல்லாம் விலகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 35 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், எல்லாம், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், இருக்கும், horary, வந்தால்