ஆரூடப் பாடல் 31 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௩௧. (31) வந்தால்..
இப்பொழுது உந்தனுக்கு கெட்டகாலம் இருந்தாலும் பயமில்லை சுகமுண்டாகும் கொப்பெனவே குடும்பமதில் கலகமாகும் கொடுத்ததை கேட்டாலே பகையுமுண்டாகும் ஒப்பவே வுபகாரம் செய்திட்டாலும் உலகினிலே அபகார மாக நேரும் தப்பாது தொழில் முறையில் நஷ்டமாகும் தயங்காமல் பத்துவார மிருந்திடாயே. |
ஆரூடத்தில் முப்பத்தியொன்று வந்திருப்பதால், தற்சமயம் உனக்கு நல்லவை எதுவும் நடக்காது. ஆனாலும் பயம் கொள்ளத் தேவை இல்லை. இந்த நிலை மாறும். இக் காலத்தில் உன் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டாகும். கொடுத்த பொருளை கேட்கச் சென்றால் பகைமை உண்டாகும். யாருக்கேனும் உதவி செய்யதால் அது கெடுதலாகவே முடியும். செய்யும் தொழிலில் நட்டம் ஏற்படும். இவை எல்லாம் இன்றிலிருந்து பத்து வாரத்தில் தீரும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 31 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், உண்டாகும், horary