ஆரூடப் பாடல் 28 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௮. (28) வந்தால்..
கிரகங்கள் பொல்லாது பொல்லாதப்பா கீர்த்தியில்லை நினைப்பதெல்லாம் தடங்கலாகும் பரதேசி போலாக்கும் பயங்கள் தோணும் பாலகனே செய்தொழிமில் நஷ்டங்காணும் உறவான பெற்றோரும் வேறுப்பாரப்பா உள்ளதொரு பொருளழியும் நோயும் காணும் புறம்பேசும் குரும்பர்களால் கலகம் நேரும் போக்கிடுவா யறுமூன்று வாரந்தானே. |
ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால்,உனக்கான கிரகங்களெல்லாம் பொல்லாததாக இருப்பதால் நன்மை இல்லை. எண்ணிய காரியம் கைகூடாது. பெற்றவற்களே உன்னை வெறுப்பார்கள். பரதேசி போன்ற நிலை ஏற்படும். மனதில் பயம் உண்டாகும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். உள்ள பொருளும் அழிந்து வறுமையால் உய்ண்டாகும். நோய் நொடி ஏற்படும். புறம் பேசுபவர்களால் கலகம் உண்டாகும். ஆனால் இவை எல்லாம் அடுத்த 18 வாரத்தில் நீங்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 28 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், ஏற்படும், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், உண்டாகும், horary, பரதேசி, கலகம்