ஆரூடப் பாடல் 27 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௨௭. (27) வந்தால்..
இக்கட்டாய் முடிந்ததெல்லாம் இனிதாய் தீரும் எண்ணிய எண்ணமெல்லாம் ஜெயமேயாகும் பக்கநின்று குலதெய்வம் பாதுகாக்கும் பாலர்கட்டு ஞானமுடன் கல்வியோகங்கும் தக்கதொரு தொழில் நடக்கும் தனமே சேரும் தாயாதி பொருள் சேரும் நோயும் நீங்கும் மிக்க பெரியோர்களிட உதவி கூடும் மேல்நாட்டு செய்திகண்டு மகிழுவாயே |
ஆரூடத்தில் இருபத்தியேழு வந்திருப்பதால், உன்னடைய ஆபத்துகளெல்லாம் இனி நீங்கும். எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும். குல தெய்வம் துணையாய் இருந்து உன்னைக் காக்கும், குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் அதிகரிக்கும். உனக்கு ஏற்ற தொழில் அமையும்.அதனால் செல்வமும் பொருட்களும் சேரும். பெரியோர் உதவிகள் கிட்டும். வெளிநாட்டு செய்தியொன்று உன்னை மகிழ்ச்சியடையச் செய்யும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 27 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், சேரும், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், நீங்கும், horary, எண்ணிய, தொழில்