ஆரூடப் பாடல் 17 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௧௭. (17) வந்தால்..
சுகமுடனே நினைத்ததெல்லாம் பலிக்குமப்பா சுகக்ஷேம மாயிருப்பாய் புவியின் மீது பகையொன்றும் நேராது குடும்பந்தன்னில் பலவிதத்தில் செய்தொழிலில் லாபங்காணும் அகமகிழ பெரியோர்கள் பொருள் கிடைக்கும் ஆதரவாய் பந்துக்களும் உதவியாவார் மிகவருந்தும் நோயதுதான் மருந்தால்தீரும் மைந்தனே வாரமது யிரண்டில்தானே. |
ஆரூடத்தில் பதினெழு வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் நிறைவேறும். சுக வாழ்வு கிடைக்கும். குடும்பத்தில் பகை விலகும்.செய் தொழில் எல்லாம் லாபம் தரும்.முன்னோர்களின் பொருள் வந்து சேரும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும்.வருத்தும் நோயும் மருந்து கொள்ள தீர்ந்து போகும். இவை எல்லாம் அடுத்த இரண்டு வாரத்தில் உனக்கு வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 17 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஆரூடங்கள், ஜோதிடம், கிடைக்கும், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், எல்லாம், horary, பொருள்