ஆரூடப் பாடல் 15 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௧௫. (15) வந்தால்..
பஞ்சமதில் சுக்கிரனின் ஆட்சியாச்சு பட்டதொரு துன்பமெல்லாம் பறந்துபோச்சு தஞ்சமென்ற பேர்களை நீ காக்கலாச்சு தனவந்த னென்றபெய ருனக்குண்டாச்சு வஞ்சமுள்ள பஞ்சர்குல மொழியலாச்சு ஓர் வஞ்சியால் பொருள்சேரும் வழக்கும்போச்சு அஞ்சாதே கெண்டமெலாம் தவறலாச்சு அறுநான்கு நாள்தனில் அதிர்ஷ்டமாச்சே |
ஆரூடத்தில் பதினைந்து வந்திருப்பதால், இனி உனக்கு ஐந்தில் சுக்கிரன் ஆட்சியாவதைக் குறிக்கிறது. எனவே இது வரை நீ பட்ட துன்பம் எல்லாம் இனி விலகும். உன்னை தஞ்சமென தேடி வருவோரை ஆதரிக்கும் வகையில் உன்னிடம் செல்வம் வந்து சேரும். ஒரு பெண் வழியாக உனக்கு செல்வம் வந்து சேரும். வம்பு, வழக்குகள் விலகும். ஆகையால் இனி நீ கவலை கொள்ளாதே இன்னும் இருபத்தி நான்கு நாளில் இதெல்லாம் சாத்தியமாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 15 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், வந்து, சேரும், செல்வம், உனக்கு, horary, விலகும்