ஆரூடப் பாடல் 6 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௬. (06) வந்தால்..
நாமகள் கருணையாலே நலியுடன் கவலைநீங்கும் தாமத மின்றியெண்ணம் தடையின்றிபலிதமாகும் கோமகள் போலேவாழ குறைவின்றி மகப்பேறாகும் ஆமென முன்னோர்வாக்கு ஒருதிங்கள் கழியப்பாரே ஆதிநாள் வினைகளெல்லாம் அப்பனே அற்றுப்போச்சு கோதின்றி விவாகமென்று குடும்பத்தில் கூடலாச்சு வாதிகள் கூட்டமெல்லாம் வகைகெட்டு போகலாச்சு கியாதியாய் குடும்பத்திலுள்ள கலகங்கலொழியலாச்சு. |
ஆரூடத்தில் ஆறு வந்தால், கலைமகளின் கருணையால் இனி கவலைகள் நீங்கும். மனதில் எண்ணிய எண்ணம் யாவும் நிறைவேறும். உன் மனம் மகிழ்ச்சியடைய குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் விவாக காரியம் ஒன்று நடக்கும். உன்னை கெடுக்க நினைக்கும் எதிரிகள் விலகிவிடுவார்கள். குடும்பத்திலுள்ள கவலையும் துன்பமும் விரைவில் நீங்கிவிடும். இது நாள் வரையில் நீ அடைந்த துன்பங்களெல்லாம் விலகும். இவை அனைத்தும் இந்த ஆரூடம் பார்த்த ஒரு மாதத்தில் நடக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 6 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், நடக்கும், குடும்பத்திலுள்ள, horary, வந்தால்