ஆரூடப் பாடல் 4 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்

௪. (04) வந்தால்..
அண்டமாகி ரண்டமதை யளந்தமாயன் அருளாலே யுந்தனுக்கு அதிர்ஷ்டமுண்டு விண்டிடுவார் புவிதனிலே விவேகியென்று வேணபொருள் சேரும்புத்ர பாக்கியமுண்டு கண்டபடி கவனமதை செலுத்திடாதே கவலையின்றி நினைத்தயெண்ணம் முடியுமப்பா தொண்டனே பதினொன்று நாளே போனால் துணைபுரிவார் செங்கமல வண்ணன் தானே. |
ஆரூடத்தில் நான்கு வந்தால், உலகங்களை அளந்த மாயன் அருளால் உனக்கு அதிஷ்டம் உண்டு. பூமியில் உள்ளவர்கள் உன்னை விவேகி என்று போற்றுவார்கள். பொருள் சேரும். புத்திர பாக்கியம் கிட்டும். கண்டபடி கவனத்தை திசைதிருப்பாதே. நினைத்ததெல்லாம் நடக்கும். இந்த ஆரூடத்தை பார்த்த நாளில் இருந்து பதினொருநாள் சென்றால் செங்கமல வண்ணன் துணையுடன் எல்லாம் சிறப்பாகும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 4 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், வண்ணன், செங்கமல, horary, வந்தால், கண்டபடி