யோனிப் பொருத்தம் - திருமணப் பொருத்தம்
கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.
இது முக்கியமான ஒன்றாகும். தாம்பத்ய உறவின் சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிக்கும் அளவுகோள் எனலாம். ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்து பொருத்தம் பார்க்கும் முறை இது. நட்சத்திரங்கள் 13 மிருகங்களாக ஆண் & பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. உத்திராடட்ம நட்சத்திரம் மட்டும் கீரி எனவும் சில சாஸ்திர நூல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண் & பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமே! பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகம்' என்றாலும் உத்தமமே. பகை மிருகம் மட்டும் சேர்க்கக்கூடாது. மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம்.
நட்சத்திரம் | மிருகம் |
அஸ்வினி, சதயம் | குதிரை |
பரணி, ரேவதி | யானை |
கார்த்திகை, பூசம் | ஆடு |
ரோகிணி, மிருகசீரிஷம் | பாம்பு |
திருவாதிரை, மூலம் | நாய் |
புனர்பூசம், ஆயில்யம் | பூனை |
மகம், பூரம் | எலி |
உத்திரம், உத்திரட்டாதி | பசு |
அஸ்தம், சுவாதி | எருமை |
சித்திரை, விசாகம் | புலி |
அனுஷம், கேட்டை | மான் |
பூராடம், திருவோணம் | குரங்கு |
அவிட்டம், பூரட்டாதி | சிங்கம் |
உத்திராடம் | கீரி |
பகை மிருகம் | ||
குதிரை | X | எருமை |
யானை | X | சிங்கம் |
ஆடு | X | குரங்கு |
பாம்பு | X | எலி |
பசு | X | புலி |
எலி | X | பூனை |
கீரி | X | பாம்பு |
மான் | X | நாய் |
உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, அதன் மிருகம் பெண் ஆடு. ஆண் நட்சத்திரம் சதயம், அதன் மிருகம் பெண் குதிரை. இவை இரண்டும் பகை பெறாததால் யோனிப் பொருத்தம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
யோனிப் பொருத்தம் - திருமணப் பொருத்தம், பொருத்தம், பெண், மிருகம், நட்சத்திரம், யோனிப், கீரி, பாம்பு, குதிரை, ஜோதிடம், திருமணப், கார்த்திகை, யானை, நாய், குரங்கு, சிங்கம், மான், புலி, பூனை, எருமை, சதயம், உண்டு, திருப்தி, நிலை, சுகம், உறவின், தாம்பத்ய, எனலாம், மிருகங்களாக, மிருகமும், ஆணிற்கு, எனவும், மட்டும், பெண்ணிற்கு