ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் - திருமணப் பொருத்தம்

திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.
பெயரே சொல்கிறது. பெண்ணின் தீர்க்கம் அல்லது ஆயுள், ஆரோக்கியம் ஆணின் நட்சத்திர தொடர்பால் எவ்விதம் மாறுபாடு அடைகிறது. என்பதை சொல்லும்! பெண் நட்சத்திரம் தொட்டு ஆண் நட்சத்திரம் ஏழுக்குள் எனில் பொருத்தம் இல்லை. ஏழுக்கு மேல் பதிமூன்று வரை எனில் மத்திம பொருத்தமே. பதிமூன்றுக்கு மேல் என்றால் உத்தமம். இப்பொருத்தம் இல்லையெனிலும் பெண் ஜாதகத்தின் ஆறாம் ஸ்தானம் அல்லது எட்டாம் ஸ்தானம் அல்லது ஆண் ஜாதகத்தில் பணிரெண்டாம் ஸ்தானம் அல்லது இரண்டாம் ஸ்தான பலம் மூலம் ஜோதிடர்கள் தீர்மானிக்க இயலும்
பெண் நட்சத்திரம் முதல் எண்ணும் போது ஆண் நட்சத்திரம் 13 க்கு மேல் வந்தால் ஸ்திரீ தீர்க்கப்பொருத்தம் உண்டு. 7 க்கு மேல் வந்தால் சுமார். 7 க்குள் வந்தால் இல்லை.
உதாரணம் : பெண் நட்சத்திரம் கார்த்திகை, ஆண் நட்சத்திரம் சதயம் என்றால் பெண் நட்சத்திரம் முதல் கார்த்திகை 1, ரோகிணி 2, மிருகசீரிஷம் 3 என்று எண்ண வேண்டும். ஆண் நட்சத்திரம் சதயம் 22 வது நட்சத்திரமாக வரும். எனவே ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் - திருமணப் பொருத்தம், பொருத்தம், நட்சத்திரம், பெண், மேல், ஸ்திரி, அல்லது, தீர்க்கப், ஸ்தானம், வந்தால், திருமணப், ஜோதிடம், சதயம், உண்டு, கார்த்திகை, எனில், பெண்ணின், இல்லை, என்றால், க்கு